வருகின்ற ஆக்ஸ்ட மாதம் விற்பனை துவங்கப்பட மஹிந்திராவின் புதிய XUV700 எஸ்யூவி காரில் 200 hp பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 185 hp பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் என இரு விதமான என்ஜின் ஆப்ஷனை பெறுவது உறுதியாகியுள்ளது.
தற்போது விற்பனையில் கிடைக்கின்ற எக்ஸ்யூவி 500 மாடலை விட மிகவும் பிரீமியம் வசதிகளை பெற்றதாகவும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக போட்டியாளர்கள் வழங்குகின்ற பல்வேறு புதிய தலைமுறை வசதிகளை விட கூடுதலான சிறப்பு வசதிகளை மஹிந்திரா கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற அல்கசார், ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி போன்ற எஸ்யூவி கார்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி 700 காரில் உள்ள இன்ஜின் போட்டியாளர்களை விட சிறப்பாக அமைந்துள்ளது. 200 ஹெச்பி பவரை வழங்குகின்ற எம் ஸ்டோலின் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பெற வாய்ப்புள்ளது. அடுத்தப்படியாக 185 ஹெச்பி பவரை வழங்கும் டீசல் என்ஜினில் ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.
நடப்பு ஜூலை மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய மஹிந்திரா XUV700 எஸ்யூவி விற்பனைக்கு ஆகஸ்ட் முதல் கிடைக்க துவங்கலாம்.