மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற யமஹா எஃப்இசட் எக்ஸ் 150 பைக்கின் உற்பத்தி நிலை படம் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக இந்த பைக்கில் இடம்பெற உள்ள இன்ஜின் மற்றும் அளவுகள் கசிந்த நிலையில் இந்த படம் கிடைத்துள்ளது.
யமஹாவின் எஃப்இசட் எஸ் வெர்ஷன் 3.0 பைக்கில் உள்ள 149 சிசி இன்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ள இந்த மாடல் ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2-வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.4 பிஎஸ் பவர் மற்றும் 13.6 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
FZ V3 மாடலை விட வித்தியாசப்படும் வகையில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ள இந்த மாடலின் பெட்ரோல் டேங் அமைப்பில் சிறிய மாறுதல்களுடன் கூடுதலான எக்ஸ்டென்ஷன் கொடுக்கப்பட்டு வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியை தவிர கூடுதலாக சைடு ஸ்டாண்டு உள்ள சமயங்களில் இன்ஜின் கட் ஆஃப் ஆப்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது. கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறுவதற்கு ஆண்டராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்ற Yamaha Motorcycle Connect X பெற்றிருக்கும்.
யமஹா FZ-X 150 பைக்கின் விலை ரூ.1.15 லட்சம் விலைக்குகள் துவங்குவதுவதுடன் விற்பனைக்கு ஜூன் முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.