இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பஜாஜ் நிறுவனத்தின் சிடி 110 பைக்கில் கூடுதல் வேரியண்டாக பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களை பெற்ற சிடி 110 எக்ஸ் விற்பனைக்கு ரூ.55,504 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
சிடி 110 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற சிடி 110 எக்ஸ் மாடலில் 115 சிசி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 ஆர்.பி.எம் சுழற்சியில் 8.6 பிஎஸ் பவரும், 5000 ஆர்.பி.எம்மில் 9.81 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இந்த என்ஜின் 4 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சிடி 110 பைக்கில் உள்ள பெரும்பாலான வசதிகளை பெற்றிருக்கின்ற புதிய மாடலில் இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் சேர்க்கப்பட்டு கூடுதலாக சிபிஎஸ் இணைக்கப்பட்டு, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஸ்பீரிங் இன் ஸ்பீரிங் சஸ்பென்ஷன் இணைக்கப்படுடள்ளது.
CT110X டிசைன் அம்சங்கள்
சாதாரண மாடலை விட வித்தியாசப்படும் வகையில் முன்புறத்தில் வட்ட வடிவ ஹெட்லைட் மேற்பகுதியில் எல்இடி டி.ஆர்.எல் உடன் நெம்பர் பிளேட் சேர்க்கபட்டும், ஹெட்லைட்டில் கிரில் கொண்டுள்ளது. முன்புற ஃபோரக்கில் கவர், தட்டையான இருக்கை, பின்புறத்தில் 7 கிலோ வரை எடை தாங்கும் திறன் பெற்ற லோடு கேரியர் சேர்க்கப்பட்டுள்ளது.
நீலம் உடன் கருப்பு, சிவப்பு உடன் கருப்பு, பச்சை நிறத்துடன் கோல்டு மற்றும் சிவப்பு என நான்கு விதமான நிறங்களை பெற்றுள்ளது.
பஜாஜ் சிடி 110 எக்ஸ் பைக்கின் விலை ரூ.55,504 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)