ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 100 மில்லியன் எடிசன் உட்பட கூடுதலாக டெஸ்டினி 125 பிளாட்டினம் எடிசன் விலை ரூ.72,050 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முன்பாக பிளெஷர் பிளஸ் மாடலில் பிளாட்டினம் எடிசன் வெளியிடப்பட்டிருந்தது.
டெஸ்ட்டினி 125 மாடலில் பிரீமியம் தோற்ற பொலிவினை பெற்று கருப்பு மற்றும் பிரவுன் நிறத்துடன் அமைந்துள்ளது. மிரர், சைலென்ஷர் மஃப்லர், கைப்பிடி மற்றும் ஃபென்டர் போன்றவற்றில் க்ரோம் பாகங்கள் பெரும்பாலும் இணைக்கப்பட்டுள்ளது. இரு வண்ண இருக்கை, இருக்கை பேக் ரெஸ்ட் மற்றும் குறைந்த மைலேஜ் இன்டிகேட்டர் வசதி போன்றவற்றை பெற்றுள்ளது.
FI நுட்பத்துடன் கூடிய ஹீரோவின் 10 சென்சார் நுட்பத்தை (XSens Technology) கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்டினி 125 பிஎஸ்6 மாடலில் 125 சிசி புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ இன்ஜின் ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் வருகிறது. 9 பிஹெச்பி பவரினை 7000 ஆர்.பி.எம் மற்றும் 10.4 என்எம் டார்க்கினை 5500 ஆர்.பி.எம்-ல் வழங்குகின்றது.
சாதரண டெஸ்டினி 125 வேரியண்ட் விலை ரூ.66,960 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.