டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் கூடுதலாக பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்துவதுடன் 2 கிலோ வரை எடை குறைந்துள்ளது. மற்றபடி பைக்கின் விலை ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய 2021 அப்பாச்சி பைக்கில் 159.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜினுடன் வருகிறது. இது 8250 ஆர்.பி.எம்-ல் 17.63 பிஎஸ் பவர் மற்றும் 7250 ஆர்.பி.எம்-ல் 14.72 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது.
முன்பாக இந்த மாடல் 16.02 பிஎஸ் மற்றும் 14.12 என்எம் டார்க் வெளிப்படுத்தி வந்தது. மேலும் எடை 2 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளதால் தற்போது டிரம் பிரேக் வேரியண்ட் 145 கிலோவும், டிஸ்க் வேரியண்ட் 147 கிலோ எடையை கொண்டுள்ளது.
எல்இடி ஹெட்லைட், மேம்பட்ட பாடி கிராபிக்ஸ், ஃபெதர் டச் ஸ்டார்ட், புதிய மிரர் மற்றும் குறைவான வேகங்களில் சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்க GTT (Glide Through Traffic) பெற்றதாக வந்துள்ளது.
அப்பாச்சி ஆர்டிஆர் 160 4 வி (டிரம்) ரூ.1.07 ஆகவும், ஆர்டிஆர் 160 4 வி (டிஸ்க்) விலை ரூ .1.10 லட்சமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.