சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படம் முதன்முறையாக வெளியாகியுள்ளதால், அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது விற்பனையில் உள்ள கேம்ரி காரின் TNGA-K பிளாட்ஃபாரத்தில் வடிமைக்கப்பட்டு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஐந்தாம் தலைமுறை ரேவ்4 காரில் பெட்ரோலில் மட்டும் கிடைக்கும் நிலையில், ஹைபிரிட், பிளக் இன் ஹைபிரிட் வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.
ரேவ் 4 காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 218 ஹெச்பி பவரை 2வீல் டிரைவில் வழங்குவதுடன் டாப் ஆல் வீல் டிரைவ் வேரியண்டில் 222 ஹெச்பி பவரை வழங்குகின்றது.
இந்திய சந்தையில் 2,500 யூனிட்டுகள் ஹோமோலோகேஷன் நேரடியாக விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால் இதன் அடிப்படையில் வெளியிடப்பட உள்ள டொயோட்டா ரேவ்4 எஸ்யூவி காரின் விலை ரூ.60 லட்சத்தில் துவங்கலாம்.
spy image source: instagram/ayushnimkarr