ஃபோர்டு நிறுவனத்தின் 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற பிரபலமான ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரின் டெயில்கேட்டில் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேர் வீல் நீக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் முன்பே ஐரோப்பா, வட அமெரிக்கா சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், டெயில்கேட்டில் இணைக்கப்பட்டுள்ள சக்கரம் நீக்கப்பட்ட வேரியண்டும் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
ஈக்கோஸ்போர்ட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷனிலும் கிடைத்து வரும் நிலையில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட மாடல் 100 ஹெச்பி பவர், 215 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.
1.5 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 122 ஹெச்பி மற்றும் 149 என்எம் டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் 5-வேக மேனுவல் அல்லது 6-வேக டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம்
கடந்த ஆண்டு ஜூலை முதல் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) வெளியிட்ட திருத்தத்தில், M1 பிரிவின் கீழ் வரும் பயணிகள் வாகனங்கள், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு (TPMS (tyre pressure monitoring system) வைத்திருப்பது) ஸ்பேர் சக்கரத்துடன் விற்பனை செய்ய தேவையில்லை. இந்த பிரிவில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் வரை அமரக்கூடிய திறன் பெற்ற வாகனங்களும் 3.5 டன்னுக்கு மேல் எடையைக் கொண்டிருக்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
எனவே, புதிய விதிகளின்படி ஈக்கோஸ்போரட்டில் டயர் பிரஷர் மானிட்டர் உடன் டீயூப்லெஸ் டயர், டயர் பஞ்சர் கிட் இணைக்கப்பட்டிருந்தால் ஸ்பேர் வீல் அவசியமில்லை.
டாப் வேரியண்டின் அடிப்படையில் புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்இ விலை ரூ.10 லட்சத்தில் துவங்கலாம்.