எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி கார்களில் குறைந்த விலை ஆட்டோமேட்டிக் மாடலாக சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் விற்பனைக்கு ரூ.16.51 லட்சம் முதல் ரூ.18.89 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
தோற்ற அமைப்பு மற்றும் வசதிகளில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி காரில் 143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் 8 வேக ஸ்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு மோட்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர இந்த இன்ஜினில் 7 வேக டிசிடி ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கிடைக்கின்றது.
ஷார்ப் மற்றும் ஸ்மார்ட் என இரு வேரியண்டுகளில் மட்டும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது.
வேரியண்ட் | விலை |
---|---|
Hector Smart CVT | ரூ. 16,51,800 |
Hector Sharp CVT | ரூ. 18,09,800 |
Hector Plus (6-seater) Smart CVT | ரூ. 17,21,800 |
Hector Plus (6-seater) Sharp CVT | ரூ. 18,89,800 |