இந்தியாவின் பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடலான 2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் உட்பட புதிய நிறங்களை பெற்று ரூ. லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஹிமாலயனில் 6,500 rpm -யில் 24.3 ஹெச்பி பவர், 4,000-4,500 rpm -யில் அதிகபட்சமாக டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாற்றங்கள் என்ன ?
மிராஜ் சில்வர், கிராணைட் கருப்பு உட்பட பைன் க்ரீன் நிறம் என மூன்று புதிய நிறங்கள் பெற்றிருப்பதுடன், புதுப்பிக்கப்பட்ட இருக்கை, விண்ட்ஷீல்டு, குறிப்பாக டிசைனில், உயரமான ரைடர்களின் காலின் முட்டி பகுதி பெட்ரோல் டேங்க் அருகே கொடுக்கப்பட்டுள்ள மெட்டல் ஃபிரேமில் உரசுவதாக பெறப்பட்ட குறையை களைவதற்கான நோக்கில் இந்த பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கிளஸ்ட்டர் பகுதியில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போனுடன் ப்ளூடூத் வாயிலாக இணைக்கப்பட்டு டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அம்சங்களை கூகுள் நிறுவன உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள டிரிப்பர் நேவிகேஷன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த வசதி மீட்டியோர் 350 மாடலில் இடம்பெற்றிருந்தது.
2021 Royal Enfield Himalayan விலை பட்டியல்
Himalayan – ரூ.2,36,000 (Siver,gery)
Himalayan – ரூ.2,39,999 (Lake Blue, Rock Red,Granite Black)
Himalayan – ரூ.2,44,000 (Pine Green)
(ஆன்ரோடு தமிழ்நாடு)