மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பொலிரோ எஸ்யூவி ஊரக பகுதிகளில் மிகப்பெரிய சந்தை மதிப்பை கொண்டுள்ள நிலையில், டியூவி300 எஸ்யூவி பெரிய அளவில் விற்பனை எண்ணிக்கை பதிவு செய்ய இயலாத நிலையில் பெயர் மாற்றத்துடன் பொலிரோவின் பிரீமியம் வெர்ஷனாக டியூவி300 நிலை நிறுத்தப்படலாம்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் டிவி விளம்பரத்திற்கான படிப்பிடிப்பு படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. இதில் முன்புற தோற்ற அமைப்பு மற்றும் பக்கவாட்டு தோற்ற அமைப்பு என அனைத்தும் டியூவி300 போலவே அமைந்திருக்கின்றது. ஆனால் பின்புறத்தில் ஸ்பேர் வீலில் பொலிரோ பேட்ஜ் இடம்பிடித்துள்ளது.
102 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 240 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது.
புதிய மஹிந்திரா பொலிரோ நியோ விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படலாம்.
image source