ரூ.31.99 லட்சத்தில் துவங்குகின்ற ஸ்கோடா நிறுவனத்தின் புதிய சூப்பர்ப் காரில் பல்வேறு மேம்பாடுகள், வசதிகள் இணைக்கப்பட்டு ஸ்போர்ட் லைன் மற்றும் Laurin & Klement (L&K) என இரு விதமான வேரியண்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிசைன்
தோற்ற அமைப்பில் பெரியளவில் மாற்றங்கள் இல்லை என்றாலும் ஸ்டைலிங் அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு ஸ்போர்ட்லைனில் கருமை நிற ஃபினிஷ் மற்றும் எல்&கே வேரியண்டில் பெரும்பாலும் க்ரோம் பாகங்கள் இணைக்கப்பட்டு, அடாப்ட்டிவ் எல்இடி ஹெட்லைட் நவீனத்துவமாக சேர்க்கப்பட்டு பயணிக்கின்ற கால சூழ்நிலை மற்றும் இடத்திற்கு ஏற்ப ஒளியை வழங்கும், 17 அங்குல அலாய் வீல் இணைந்துள்ளது.
இன்டிரியர்
எல்&கே வேரியண்டில் இரண்டு ஸ்போக் பெற்ற மல்டி ஃபங்ஷனல் ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்லைனில் மூன்று ஸ்போக் பெற்ற ஸ்டீயரிங் வீலும், மற்றபடி பொதுவாக விரிச்சுவல் காக்பிட் டிஜிட்டல் கிளஸ்ட்டர், 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உடன் மிரர்லிங்க் வயர்லெஸ் நுட்பம், ப்ளூடூத், ஆடியோ ஸ்டிரீமிங் உட்பட வயர்லெஸ் சார்ஜிங் பேட் அமைந்துள்ளது.
மேலும் எல்&கே வேரியண்டில் கூடுதலாக டிரைவ் மோட் செலக்ட், 360 டிகிரி கேமரா மற்றும் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளது.
இன்ஜின்
சூப்பர்ப் காரின் இரண்டு வேரியண்டுகளிலும் 2.0 லிட்டர் TSI 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 188 bhp மற்றும் 320 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த இன்ஜினுடன் 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
போட்டியாளர்கள்
நேரடியான போட்டியை ஏற்படுத்தும் ஒரே காராக டொயோட்டா நிறுவனத்தின் கேம்ரி ஹைபிரிட் மட்டுமே விளங்குகின்றது.
2021 Skoda Superb விலை
முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த காரை விட ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2.00 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
2021 Skoda Superb Sportline – ₹ 31.99 லட்சம்
Superb Laurin & Klement (L&K) – ₹ 34.99 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் இந்தியா)