ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட 7 இருக்கை பெற்ற கிராவிட்டாஸ் உற்பத்தி நிலை மாடல் டாடா சஃபாரி எஸ்யூவி என்ற பெயரில் விற்பனைக்கு ஜனவரி 26 ஆம் தேதி வெளிவருவது உறுதியாகியுள்ளது. முதன்முறையாக 1998 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சஃபாரி இந்திய எஸ்யூவி சந்தையின் நாயகனாக திகழ்ந்த நிலையில் மீண்டும் இந்த பெயரை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதிய டாடா சஃபாரி
2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவர்மற்றும் 350 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். இந்த காருக்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6 வேக மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும். 2 வீல் டிரைவ் உட்பட ஆல் வீல் டிரைவ் என இரு விதமான ஆப்ஷனையும் பெற்றிருக்கும்.
மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய சஃபாரியில் நவீனத்துவமான வடிவமைப்பினை பெற்று இன்டிரியரில் புதிய தலைமுறைக்கு ஏற்ற வசதிகளை பெற்றதாக அமைந்திருக்கும்.
கிராவிட்டாஸ் என்ற பெயரில் எநிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியர்களால் மிகவும் அறியப்பட்ட பெயரில் வருவது மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைக்கலாம்.
டாடா மோட்டார்ஸின் பிரீமியம் எஸ்யூவி எதிர்வரும் ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹாரியர் எஸ்யூவி தற்போது ரூ.13.84 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாடலை விட ரூ.1.50 லட்சம் முதல் கூடுதலான விலையில் வெளியிடப்படலாம்.