வரும் ஜனவரி 28 ஆம் தேதி ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கிகர் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என இரு விதமான இன்ஜின் ஆப்ஷன் பெற உள்ளது.
தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற மேக்னைட் எஸ்யூவி காரின் அடிப்படையிலான பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ள உள்ள கிகர் காரில் சன்ரூஃப் உட்பட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பொருத்தப்பட்டிருக்கும்.
ரெனால்ட் கிகர்
ரெனால்ட் கிகர் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, பேஸ் வேரியண்டுகளில் 1.0 லிட்டர் B4D பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.
ரெனால்ட் கிகர் விலை எதிர்பார்ப்புகள்
கிகர் எஸ்யூவி காரின் விலை அனேகமாக ரூ.5.50 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது. மேக்னைட் எஸ்யூவி அறிமுக சலுகையாக ரூ.4.99 லட்சம் ஆக இருந்த நிலையில், இப்போது ரூ.5.54 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.