இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆடி A4 ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களுடன் கூடுதலான வசதிகளுடன் 190 ஹெச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முன்புற கிரில் அமைப்பில் சிறிதான மாற்றங்களுடன் வழக்கமான பாரம்பரிய ஆடிய கிரிலுடன், புதிய ஹெட்லைட் மற்றும் எல்இடி டி.ஆர்.எல் இணைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட பம்பரை பெற்றுள்ளது.
இன்டிரியரில், ஸ்டாண்டர்டு, பிரீமியம் பிளஸ் டிரிம் என இரண்டிலும் அலுமினியம் எலிப்ஸ் இன்லேஸ், லெதர் அப்ஹோல்ஸ்டரி, 10.1 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், ஆடி ஸ்மார்ட்போன் யூஐ அம்சத்தைப் பெறுகிறது.
கீலெஸ் என்ட்ரி மற்றும் சைகை அடிப்படையிலான பூட் திறக்க அனுமதிக்கும் அம்சங்கள் மற்றும் 460 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் பெற்றுள்ளது.
190 ஹெச்பி பவர், 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டு 7 வேக S-tronic கியர்பாக்ஸூடன் வந்துள்ளது. அதிகபட்சமாக அடியின் ஏ4 காரின் வேகம் மணிக்கு 241 கிமீ ஆகவும், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.3 விநாடிகள் எடுத்துக் கொள்ளும்.
2021 Audi A4 Price
Premium Plus – ரூ. 42.34 லட்சம்
Technology – ரூ. 46.67 லட்சம்