ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரில் சில வேரியண்டுள் நீக்கப்பட்டு, கூடுதல் வசதிகள் பெற்றதாகவும் விலை அதிகபட்சமாக ரூ.39,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஜனவரி மாதம் முதல் விலையை உயர்த்தியுள்ள நிலையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரின் விலை ரூ.20,000 முதல் ரூ.39,000 வரை குறைந்துள்ளது.
2021 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
பெட்ரோல் வேரியண்டுகளில் டைட்டானியம் AT, தண்டர் MT மற்றும் டைட்டானியம்+ MT, டீசல் வேரியண்டுகளில் டைட்டானியம்+, தண்டர் என மொத்தமாக 5 வேரியண்டுகள் நீக்கப்பட்டுள்ளது.
அடுத்தப்படியாக, வாடிக்கையாளர்களிடன் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் நடுத்தர டைட்டானியம் வேரியண்டில் சன்ரூஃப் இணைக்கப்பட்டுள்ளது. முன்பாக டைட்டானியம்+ மற்றும் எஸ் வேரியண்டில் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.
இன்ஜின் விபரம்
1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட ஈக்கோஸ்போர்ட்டில் 100 ஹெச்பி பவர் மற்றும் 215 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.
1.5 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 122 ஹெச்பி மற்றும் 149 என்எம் டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் 5-வேக மேனுவல் அல்லது 6-வேக டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை பட்டியல்
1.5-litre Ti-VCT petrol –
Ambiente MT – ரூ. 7,99,000
Trend MT – ரூ. 8,64,000
Titanium MT – ரூ. 9,79,000
S MT – ரூ. 10,99,000
Titanium+ AT – ரூ. 11,19,000
1.5-litre TDCi diesel –
Ambiente MT – ரூ. 8,69,000
Trend MT – ரூ. 9,14,000
Titanium MT – ரூ. 9,99,000
S MT – ரூ. 11,49,000
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டர்போ பெட்ரோல் அறிமுக எப்போது ?
மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஈக்கோஸ்போர்ட் காரில் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்த முறை மஹிந்திராவின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்ற டைட்டானியம்+ அறிமுகம் நடப்பு ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.