பிரசத்தி பெற்ற இந்திய டிசி டிசைன்ஸ் நிறுவனம், கார் மற்றும் ஆடம்பர வாகனங்களை கஸ்டமைஸ் செய்வதில் முன்னணி வகிக்கின்ற நிலையில் மோசடி மற்றும் ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளில் இந்நிறுவன தலைவர் திலீப் சாப்ரியா கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார்
இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையை பெற்ற டிசி நிறுவனத்தின் அவந்தி கார் விற்பனையில் மோசடியில் ஈடுபட்டு சுமார் 40 கோடி வரை இழப்பீடு ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா டுடெ வெளியிட்டுள்ள செய்தியில் டி.சி அவந்தி கார் மோசடி என்பது கார் நிதி மற்றும் மோசடி என்று திலீப் சாப்ரியாவின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிறுவனத்தின் அவந்தி ஸ்போர்ட்ஸ் காரை விற்பனை செய்வத்ற்கு திலீப் சாப்ரியா ஒரே இன்ஜின் மற்றும் சேஸ் எண்களைக் கொண்ட பல கார்களை விற்பனை செய்துள்ளார் எனவும், சட்டவிரோதமான முறையில் ஒரு காரில் பல கடன்களை எடுத்து பின்னர் மூன்றாம் தரப்பினருக்கு காரை விற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சாப்ரியா தனது சொந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கார்களை NBFC நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட கடன்களில் வாங்கியுள்ளார். பின்னர் அவற்றை மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர்களுக்கு விற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திலீப் சாப்ரியா 90 க்கும் மேற்பட்ட கார்களை இதுபோன்ற போலியான முறையில் விற்றதாக குற்றப்பிரிவு சந்தேகிக்கிறது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 127 டிசி அவந்தி கார்கள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டறிந்துள்ளனர். இந்த கார்களில் பலவற்றில் திலீப் சாப்ரியா டிசைன்ஸ் பிரைவேட் லிமிடெட் தனது சொந்த கார்களுக்கான வாடிக்கையாளர்களாகக் காட்டி பல கடன்களைப் பெற்றுள்ளது.
பி.எம்.டபிள்யூ பைனான்சியல் சர்வீசஸ் போன்ற பல்வேறு என்.பி.எஃப்.சி நிறுவனங்களிடமிருந்து இதுபோன்ற மோசடியில் 90 கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுபோன்ற உயர் ரக கார்களுக்கு பெரும் வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக மேற்கண்ட மோசடி செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரனையில் ரூ.40 கோடி வரை மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் மேலும் இந்த மோசடியின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.