ஃபோக்ஸ்வேகன் குழுமம் இந்திய சந்தையில் தனது சந்தை மதிப்பினை உயர்த்த பல்வேறு எஸ்யூவிகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில், டைகுன் எஸ்யூவி காரின் டீசரை வெளியிட்டுள்ளது.
2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட டைகூன் எஸ்யூவி கான்செப்ட் மாடலின் அடிப்படையில் MQB A0 IN பிளாட்ஃபாரத்தில் உற்பத்தில் நிலை மாடல் விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்படலாம்.
உற்பத்திநிலை டைகன் எஸ்யூவி காரில் 130 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும், 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டு இயக்கப்படும். இந்த காரில் 6 வேக மேனுவல் உட்பட 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்திய சந்தையில் டீசல் என்ஜின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திக் கொள்ள வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கூடுதலாக சிஎன்ஜி இணைக்கப்படலாம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகியவற்றை எதிர்கொள்வதுடன், இதே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள ஸ்கோடாவின் விஷன் இன் எஸ்யூவி காரையும் எதிர்கொள்ள உள்ளது.