வரும் ஜனவரி 2021 முதல் இசுசூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை ரூ.10,000 வரை உயர்கின்றது. இந்நிறுவனம் இந்தியாவில் பிஎஸ்-6 நடைமுறைக்கு பின்னர் இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக்குகள் மட்டும் விற்பனை செய்து வருகின்றது.
முன்பாக இந்திய சந்தையில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தற்பொழுது இந்நிறுவனமும் இணைந்துள்ளது.
அதிகபட்சமாக ரூபாய் 10 ஆயிரம் வரை விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த விலையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளதாக இசுசூ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது