நடுத்தர அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பிஎஸ்6 சுசூகி V-Strom 650XT பைக்கின் விலை ரூ.8.84 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்-4 மாடலை விட ரூ.1.38 லட்சம் வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
பிஎஸ்6 மேம்பாடுடன் கூடிய இன்ஜினை தவிர மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை. வி – ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி மாடலில் 645cc, லிக்யுட்-கூல்டு, நான்கு ஸ்ட்ரோக், V ட்வீன் இன்ஜின் கொண்டு 70bhp பவர் மற்றும் 66Nm டார்க் கொண்டதாக விளங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
18 இன்ச் முன்புற வீல் மற்றும் 17 இன்ச் ரியர் வீல் மற்றும் வழக்கமான டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஆகியவற்றை கொண்டுள்ளது. V-ஸ்டார்ம் 650 XT மோட்டார் சைக்கிள்களில் இரு விதமான டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதை தேவைப்பட்டால் சுவிட்ச் ஆப் செய்து கொள்ள முடியும்.
சாம்பியன் மஞ்சள் 2 மற்றும் பேர்ல் வெள்ளை என இரண்டு வண்ண விருப்பங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுசூகி பிக் பைக்குகள் டீலர்ஷிப்களிலும் கிடைக்கும்.
web title : BS6 Suzuki V-Strom 650XT launched in India