ரெப்சால் ஹோண்டா மோட்டோ ஜிபி கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை 800 எட்டியுள்ளதால் சிறப்பு டியோ ஸ்கூட்டர் மாடலை ரூ.73,557 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) விலையை நிர்ணையித்துள்ளது. சாதாரன DLX வேரியண்ட்டை விட ரூ.2,500 வரை கூடுதலாக அமைந்துள்ளது.
டியோ ரெப்சால் எடிசனில் ஆரஞ்சு வண்ண சக்கரங்களுடன் ரெப்சோல் ஹோண்டா மோட்டோஜிபி பைக்கின் ரேசிங் நிறத்தை ஈர்க்கப்பட்ட வண்ணத்தை பெற்றுள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.
ப்ரோகிராம்டு ஃபயூவல் இன்ஜெக்ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது.
ஹோண்டாவின் ரேசிங் டி.என்.ஏ பற்றி ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அட்சுஷி ஒகாட்டா கூறுகையில், “ஹோண்டாவின் வரலாற்றில் ரேசிங் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஹோண்டா மற்றும் ரெப்சால் ரேஸ் டிராக்கில் வெற்றிகரமான சாதனைகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. மேலும், சமீபத்திய 800 வது மோட்டோஜிபி வெற்றி ஹோண்டாவின் பந்தய திறனுக்கு மற்றொரு சான்றாகும். இந்த சாதனையை கொண்டாடும் வகையில் இந்திய ரேசிங் பிரியர்களுக்கு ஹார்னெட் 2.0 மற்றும் டியோவின் ரெப்சோல் ஹோண்டா பதிப்புகளை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
Web title : Repsol Honda editions of Dio launched in India