இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்பட்ட மாடல் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
விற்பனையில் உள்ள மாடலின் முகப்பு கிரில் அமைப்பில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட புதிய பம்பர் மற்றும் ஹெட்லைட் அமைப்பினை கொண்டதாக வந்துள்ளது. பக்கவாட்டில் எந்த மாற்றங்களும் இல்லாமல், பின்புற பம்பர் அமைப்பு மற்றும் டெயில் லைட்டில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இன்டிரியரில் வழங்கப்பட்டுள்ள 10.25 டிஜிட்டல் டையல் டிஸ்பிளே வழங்கப்பட்டு ஸ்டாண்டர்டாக 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்ஷனலாக 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குகின்ற ஹூண்டாயின் ப்ளூலிங்க் டெக்னாலாஜி இணைக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, கோனா எலக்ட்ரிக் காரில் 39.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டு 136 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் மாடல் 304 கிமீ ரேஞ்சு வழங்கும் அல்லது 64 கிலோவாட் பேட்டரி பெற்று 204 ஹெச்பி பவர் வெளிப்படுக்கின்ற டாப் வேரியன்ட் 483 கிமீ ரேஞ்சை வெளிப்படுத்தும்.
இந்தியாவில் கிடைக்கின்ற ஹூண்டாய் கோனா இவி காரில் 39 கிலோவாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
web title : 2021 Hyundai Kona Electric facelift revealed