பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி சுசுகி நிறுவனம் வேகன் ஆர், செலிரியோ மற்றும் ஆல்ட்டோ கார்களில் சிறப்பு ஃபெஸ்டிவ் எடிசனை கூடுதலான பல்வேறு அக்சசெரீஸ் பெற்றதாக அறிமுகம் செய்துள்ளது.
குறைந்த விலை ஆல்டோ காரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள தொடுதிரை மியூசிக் சிஸ்டம், கென்வூட் ஸ்பீக்கர்கள், டூயல் டோன் சீட் கவர்கள், ஸ்டீயரிங் கவர், வெவ்வேறு தரை விரிப்புகள், கீலெஸ் என்ட்ரி கொண்ட பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை பெற சாதாரன வேரியண்ட்டை விட கூடுதல் ஆக்செரிஸ்களை பெற ரூ.25,490 கூடுதல் கட்டணமாகும்.
செலிரியோ காரில் சோனி டபூள் டின் ஆடியோ சிஸ்டத்தில்
புளூடூத் இணைப்பு, ஸ்டைலான இருக்கை கவர்கள், பின்புற இருக்கை குஷன், டிசைனர் தரை விரிப்புகள், பியானோ பிளாக் பாடி சைட் மோல்டிங்ஸ், கதவு வைசர் மற்றும் நம்பர் பிளேட்டில் கார்னிஷ் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை கூடுதலாக ரூ.25,990 ஆகும்.
மாருதியின் வேகன் ஆர் காரில் முன் மற்றும் பின்புற பம்பர் பாதுகாப்புகள், முன் மேல் கிரில் குரோம் பூச்சூ, ஸ்கிட் பிளேட், வீல் ஆர்சு கவர், டோர் வைசர், இருக்கை கவர்கள், ஸ்டைலிங் கிட்ஸ் மற்றும் டிசைனர் தரை விரிப்புகள் ஆகியவற்றைப் பெறுகிறது. இவற்றின் விலை கூடுதலாக ரூ.29,990 ஆகும்.
web title : Maruti Launches Alto, Celerio & Wagon R Festive Edition