2020 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பினை தொடர்ந்து சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் விற்பனையில் உள்ள எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் முதல் மாத விற்பனை எண்ணிக்கை 6,639 ஆக பதிவு செய்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 12,037 யூனிட்டுகளை டெலிவரி வழங்கி நிலையில், கடந்த செப்டம்பரில் 12,930 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் தீபாவளி சிறப்பு சலுகையாக பழைய இருசக்கர வாகனத்தின் எக்ஸ்சேஞ் செய்தால் ரூ.3000 போனஸ் வழங்கப்படும். ஏற்கனவே ஒரு ஹீரோ மோட்டார்சைக்கிள் தயாரிப்பு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2,000 வரை லாயல்டி தள்ளுபடி வழங்க உள்ளது. ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் ரூ.2,000 வரை விலை குறைப்பை பெறலாம்.
அடுத்தப்படியாக, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின வாங்குபவர்களுக்கு ரூ.5000 வரை கேஷ்பேக் கிடைக்கும். மேலும் நீங்கள் பேடிஎம் மூலமாக இந்த மாடலை வாங்கினால் ரூ.7500 வரை கேஷ்பேக் வழங்க உள்ளனர். இந்த சலுகை பல்வேறு நிபந்தனைகளுடன் அக்டோபர் 17,2020 வரை மட்டும் கிடைக்கும்.
Web title : hero motocorp announces diwali offers on xtreme 160r