நாட்டின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் பாஸ் இலகுரக டிரக் (intermediate commercial vehicle – ICV) மாடல் LE மற்றும் LX என இரு விதமான வேரியண்ட்களில் 11.1 டன் முதல் 14.05 டன் வரையிலான GVW கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
சுமை ஏற்றுதல் 14 அடி , 17 அடி, 20 அடி, 22 அடி மற்றும் 24 அடி வரை பாடி ஸ்பேஸ் அமைந்துள்ளது. பாடி வகை விருப்பங்களில் ஹை சைடு டெக், ஃபிக்ஸ்டு சைடு டெக், டிராப் சைட் டெக், கேப் சேஸ், கன்டெய்னர் மற்றும் டிப்பர் ஆகியவற்றில் கிடைக்க தொடங்கியுள்ளது.
அசோக் லேலண்ட் பாஸ் டிரக்
பார்சல் & கூரியர், கோழி, ஒயிட், வேளாண் பொருட்கள், ஈ-காமர்ஸ், எஃப்எம்சிஜி, ஆட்டோ பாகங்கள் மற்றும் ரீஃபர் உள்ளிட்ட பல வணிக சார்ந்த பயன்பாட்டிற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ள அசோக் லேலண்ட் பாஸ் டிரக்கில் i-Gen6 டெக்னாலாஜி ஆதரவினை பெற்ற 150 ஹெச்பி பவர் மற்றும் 450 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த டிரக்கில் இணைக்கப்பட்டுள்ள ADDA: ADVANCED DIGITAL DRIVER ASSIST எனப்படுகின்ற கிளஸ்ட்டரில் சராசரி மைலேஜ், ட்ரீப் மீட்டர் உடன் மைலேஜ் விபரம், எந்த கியரில் இயக்கினால் சிறப்பான செயல்திறன் கிடைக்கும் என்பதற்கான Gear Shift Advisory System (GSAS), மற்றும் ரிவர்ஸ் , பார்க்கிங் அசிஸ்ட் (Reverse Park Alert Systems – RPAS) வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடலை பாஸ் டிரக்கில் 7 சதவிகித கூடுதல் ஃப்ளூயிட் செயல்திறன், டயர் செயல் திறன் 5 சதவிகிதம் அதிகப்பு, 30 சதவிகித சர்வீஸ் இடைவெளி மற்றும் 5 சதவிகித குறைந்த பராமரிப்பு செலவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அசோக் லேலண்ட் பாஸ் LE மற்றும் LX என இரண்டும் 4 ஆண்டு அல்லது 4 லட்சம் கிமீ உத்தரவாதத்துடன் வருகிறது. இதனை 6 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். இந்நிறுவனம் 4 மணிநேர முதல் 48 மணிநேர மறுசீரமைப்பு உறுதிமொழியுடன் வருகிறது. அசோக் லேலண்ட் ‘விரைவான விபத்து பழுதுபார்ப்பையும்’ வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மேலும் சர்வீஸ் சென்டர்களில் பிரத்தியேக பே கொண்டிருக்கும். இந்தியா முழுவதும் 3,000 க்கும் மேற்பட்ட சர்வீஸ் பாயிண்டுகள் கொண்டுள்ளன.
அசோக் லேலண்ட் பாஸ் டிரக் ஆரம்ப விலை ரூ.18 லட்சம் (விற்பனையகம் சென்னை, மும்பை, டெல்லி) முதல் துவங்குகின்றது. சமீபத்தில் படா தோஸ்த் மாடலை இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
Web Title : Ashok Leyland launches Boss icv truck with i-gen6 technology