வரும் நவம்பர் 6 ஆம் தேதி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு வெற்றியாளராக மீட்டியோர் 350 பைக் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் வெளியான ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்கிற்கு கடும் சவாலினை ஏற்படுத்த உள்ளது.
முன்பே ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மாடலில் இடம்பெற உள்ள பல்வேறு முக்கிய வசதிகள், இன்ஜின் உட்பட வேரியண்ட் என அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிகாரப்பூர்வ விற்பனைக்கு வெளியாகின்ற தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டபுள் கார்டில் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள க்ரூஸர் ரக மீட்டியோரின் 350 மாடலில் இனம்பெற உள்ள புத்தம் புதிய லாங் ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துவது உறுதியாகியுள்ளது. முந்தைய பிஎஸ்-6 யூசிஇ 350 என்ஜின் பவர் 19.8 பிஹெச்பி மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுத்தி வருகின்றது.
ஃபயர்பால், ஸ்டெல்லர், மற்றும் சூப்பர் நோவா (Fireball, Stellar & Supernova) என மூன்று விதமான வேரியண்டில் உள்ள வசதிகள் மற்றும் 7 விதமான நிறங்களின் விபரம் தற்போது இணையத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக மீட்டியோரில் இடம்பெற உள்ள டிரிப்பர் நேவிகேஷன் ப்ளூடூத் ஆதரவுடன் செயல்படக்கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷனாக விளங்கும்.
அடுத்த மாதம் நவம்பர் 6 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ராயல் என்ஃபீல்டூ மீட்டியோர் 350 பைக்கின் விலை ரூ.1.68 லட்சத்தில் துவங்கலாம்.
Web Title : Royal Enfield meteor 350 launch date announced