மணிக்கு 532.93 கிமீ வேகத்தில் பயணித்து உலகின் மிக அதிவேக உற்பத்தி நிலை கார் என்ற பெருமையை எஸ்எஸ்சி டூடாரா (SSC Tuatara) ஹைப்பர் கார் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் 100 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் SSC Tuatara விலை $1,625,000 முதல் டாப் வேரியண்ட் $1,901,000 ஆக நிர்ணையிக்கபட்டுள்ளது.
முன்பாக உலகின் அதிவேக கார் என்ற பெருமையை கோனிக்செக் ஆகெரா ஆர்எஸ் சராசரியாக 277.9 மைல் (மணிக்கு 447.23 கிமீ) மற்றும் அதிவேகம் 284.55 மைல் (மணிக்கு 457.94 கிமீ) வேகத்தை கொண்டிருந்தது.
மேலும் ஜெர்மனி நாட்டில் மாற்றியமைக்கப்பட்ட புகாட்டி சிரோனை சூப்பர் காரின் அதிகபட்ச சராசரி வேகம் மணிக்கு 304.8 மைல் (மணிக்கு 490.52 கிமீ) வேகத்தை பதிவு செய்துள்ளது.
இப்போது எஸ்எஸ்சி (Shelby SuperCars Inc) நிறுவனத்தின் டூடாரா ஹைப்பர் கார் 1247 கிலோ (உலர் எடை) கொண்டுள்ள இந்த மாடலில் 5.9 லிட்டர் இரட்டை டர்போ, பிளாட் பிளேன் கிராங்க் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 1750 ஹெச்பி பவரை E85 பெட்ரோலை (91 ஆக்டேன் பெட்ரோலில் 1350 ஹெச்பி) வெளிப்படுத்தும். இதில் 7-வேக ரோபோடைஸ் மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
2020 அக்டோபர் 10 ஆம் தேதி நெவாடாவின் பஹ்ரம்ப் அருகே லாஸ் வேகாஸுக்கு வெளியே, State Route 160 -யில் 7 மைல் (11.26 கி.மீ) நீளத்தில் நடைபெற்றது. இந்த சாதனையை தொழில்முறை பந்தய ஓட்டுநர் ஆலிவர் வெப் மேற்கொண்டார்.
பொது சாலையில் வேகமாக மணிக்கு 313.12 மைல் (மணிக்கு 503.92 கிமீ)
பொது சாலையில் வேகமாக இரண்டாவது முறை – 321.35 மைல் (மணிக்கு 517.16 கிமீ)
பொது சாலையில் அதிக வேகம் மூன்றாவது முறை – 331.15 மைல் (மணிக்கு 532.93 கிமீ)
2007 ஆம் ஆண்டில், இந்நிறுவனத்தின் முதல் கார், அல்டிமேட் ஏரோ, 255.83 மைல் (மணிக்கு 411.72 கிமீ) எட்டி வேகமான கார் என்ற பெயரை பெற்றது இங்கே குறிப்பிடதக்கதாகும்.
உலகின் அதிவேக கார் பெயர் மற்றும் வேகம் எவ்வளவு ?
உலகின் அதிவேக கார் என்ற பெருமையை SSC Tuatara பெற்றுள்ளது. இதன் வேகம் மணிக்கு 331.15 மைல் (மணிக்கு 532.93 கிமீ) ஆகும்.
Web Title : World’s Fastest Production Car SSC Tuatara, Hits A Top Speed Of 532.93 kmph