டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பிரசத்தி பெற்ற 125சிசி ஸ்கூட்டர் மாடலான என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் என்ற பெயரில் பிரத்தியேகமான மார்வெல் அவென்ஜர்ஸ் கதாநாயகர்களான பிளாக் பாந்தர், ஐயன் மேன் மற்றும் கேபடன் அமெரிக்கா ஆகியவற்றின் அடிப்படையிலான பாடி கிராபிக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற என்டார்க் 125 ரேஸ் எடிசன் மாடலை விட ரூ.2,500 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது. பாடி கிராபிக்ஸ் உட்பட புதிதான ஸ்டெல்த் பிளாக், காம்பட் ப்ளூ மற்றும் இன்வின்சிபிள் ரெட் நிறங்களை தவிர மற்றபடி வசதிகள், இன்ஜின் பவர் போன்னவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.
என்டார்க் 125 பிளாக் பாந்தர்
ஜெட் பிளாக் நிறத்துடன் பர்பிள் நிறம் இணைக்கப்பட்டு, பிளாக் பாந்தர் சூட் கிராபிக்ஸ், 66 (1966) என்ற எண் எந்த ஆண்டு மார்வெல் அவென்ஜர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.
என்டார்க் 125 கேப்டன் அமெரிக்கா
ப்ளூ, வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களுடன் மார்வெல் யூனிவர்ஸ் வெளியிட்ட ஆண்டினை குறிப்பிடும் வகையில் 41 (1941) இணைக்கப்பட்டு, Super Soldier என்ற பேட்ஜ் இரு பக்க பேனல்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
என்டார்க் 125 ஐயன் மேன்
சிவப்பு மற்றும் கோல்டு நிறத்தில் வழங்கப்பட்டு ஐயன்மேன் ஹெல்மெட் பொறிக்கப்பட்டுள்ளது. ஐயன்மேன் 29 வது சூட் என குறிப்பிடுவதற்கு XXIX குறியிடப்பட்டுள்ளது. வெளியிட்ட ஆண்டினை குறிப்பிடும் வகையில் 63 (1963) இணைக்கப்பட்டுள்ளது.
என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய CVTi-REVV 124.79 சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500 ஆர்.பி.எம் சுழற்சியில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500 ஆர்.பி.எம் சுழற்சியில் 10.5 Nm டார்க்கினை வழங்குகின்றது.
இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் வகையிலான ஆதரவினை கொண்டதாக வந்துள்ள என்டார்க் 125 மாடலில் டிவிஎஸ் SmartXonnect எனப்படும் நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகும்.
இந்த டிஜிட்டல் கிளஸ்ட்டரிலிருந்து ப்ளூடூத் வாயிலாக மொபைல் போனை இணைக்கும் வசதி உட்பட, நேவிகேஷன் , அதிகபட்ச வேகம், லேப் டைமர், மொபைல் போன் பேட்டரி இருப்பு, இறுதியாக பார்க்கிங் செய்த இடம், சர்வீஸ் ரிமைன்டர், ட்ரிப்மீட்டர், இன்கம்மிங் அலர்ட், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் அலர்ட், எஞ்சின் வெப்பம், மொபைல் போன் நொட்வொர்க் சிக்னல், ஆட்டோ சிங்க் கடிகாரம், பிரத்தியேக ரைட் ஆப் போன்ற 60 அம்சங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது.
புதிய டிவிஎஸ் என்டார்க் 125 விலை பட்டியல்
என்டார்க் 125 டிரம் – ரூ.75,842
என்டார்க் 125 டிஸ்க் – ரூ.79,842
என்டார்க் ரேஸ் எடிசன் – ரூ.83,422
என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் எடிசன் – ரூ.85,922
(விற்பனையக விலை தமிழ்நாடு)
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா கிரேஸியா 125, ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125, யமஹா ரே இசட்ஆர் 125, சுசூகி பர்க்மென் ஸ்ட்ரீட் 125 உட்பட ஆக்டிவா 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125, சுசூகி ஆக்செஸ் 125 போன்றவற்றை என்டார்க் 125 எதிர்கொள்ளுகின்றது.
Web Title : TVS Ntorq 125 supersquad Marvel Avengers Edition Launched