சமீபத்தில் தார் #1 எஸ்யூவி மாடல் ரூ.1.11 கோடி வரை எலத்துக்கு எடுக்கப்பட்ட நிலையில், இதன் மீதான வரவேற்பினை மேலும் அதிகரித்தது.
தார் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 5000 RPM-ல் 150 ஹெச்பி பவர் மற்றும் 1500-3000rpm-ல் 320 என்எம் டார்க் (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 என்எம் டார்க் (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.
Web Title : New Mahindra Thar garners over 15,000 bookings