இந்தியாவின் இசுசூ மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற டி-மேக்ஸ் மற்றும் டி-மேக்ஸ் எஸ்-கேப் என இரண்டு வரத்தக ரீதியான பிக்கப் டிரக்குகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ற இன்ஜின் பெற்ற இரண்டு பிக்-கப் டிரக்குகளை இசுசூ அறிமுகம் செய்துள்ளது. டி-மேக்ஸ் மாடல் சிங்கிள் கேபின் பெற்று சூப்பர் ஸ்ட்ராங் என இருவிதமான ஆப்ஷனுடன் வந்துள்ளது. அடுத்தப்படியாக, டபுள் கேபின் பெற்ற டி-மேக்ஸ் எஸ்-கேப் மாடலும் வந்துள்ளது.
இசுசூ டி-மேக்ஸ் & டி-மேக்ஸ் எஸ்-கேப்
டி-மேக்ஸ் மற்றும் டி-மேக்ஸ் எஸ்-கேப் மாடல்கள் பிஎஸ் 6 இணக்கமான 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் பெற்று புதிய விஜிஎஸ் டர்போசார்ஜருடன் அமைந்துள்ளது. 3,800 ஆர்பிஎம்-ல் 78 பிஹெச்பி பவரும், 1,500-2,400 ஆர்பிஎம்-ல் 176 என்எம் டார்க் உருவாக்குகிறது. இரண்டு மாடல்களும் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக இணைக்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடலை விட புதிய இசுசூ பிக்கப் டிரக்கின் முன்புற கிரில் மற்றும் பம்பர் அமைப்பு புதுப்பிக்கப்பட்டு, புதிய ஹெட்லைட் பெற்றதாக வந்துள்ளது. இன்டிரியரில் இரு மாடல்களும் MID கிளஸ்ட்டரை பெற்று கியர் பொசிஷன் இன்டிகேட்டர், இருக்கைகள் மேம்படுத்தப்பட்டு ஓட்டுநர் இருக்கை உயரம் அட்ஜெஸ்ட் செய்வதுடன் மற்றும் ஸ்லைடிங் கோ-டிரைவர் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
இசுசூ டி-மேக்ஸ் மாடலில் இரண்டு வேரியண்டுகளில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்ட்ராங் வேரியண்ட்டில் வந்துள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள மாடல் 1240 கிலோ சுமை தாங்கும் திறனை பெற்றிருக்கின்ற மாடலின் Gross Vehicle Weight (GVW) 2,990 கிலோ ஆகும். புதிதாக வந்துள்ள டி-மேக்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் 470 கிலோ கூடுதலாக பெற்று 1710 கிலோ பே லோடு கொண்டு Gross Vehicle Weight (GVW) 3,490 கிலோ கொண்டதாகும்.
அடுத்ததாக வந்துள்ள இரண்டு கேபின் பெற்ற டி-மேக்ஸ் எஸ்-கேப் காரில் 5 இருக்கைகளுடன் ஸ்டாண்டர்டு மற்றும் ஹை-ரைடு என இரு விதமான வேரியண்ட்டை கொண்டுள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட் 1100 கிலோ சுமை தாங்கும் திறனை பெற்றிருக்கின்ற மாடலின் Gross Vehicle Weight (GVW) 2,850 கிலோ ஆகும். அடுத்து, ஹை ரைடு வேரியண்ட் 1050 கிலோ பே லோடு கொண்டு Gross Vehicle Weight (GVW) 2,850 கிலோ கொண்டதாகும்.
இரண்டு மாடல்களிலும் ஸ்பிளாஸ் ஒயிட், டைட்டானியம் சில்வர் மற்றும் கலேனா கிரே என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.
இசுசூ D-Max, D-Max S-cab விலை விபரம்
பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற இசுசூ D-Max மாடல் ரூ.7.84 லட்சம் முதல் ரூ.8.39 லட்சம் வரை, D-Max S-Cab விலை ரூ.9.82 லட்சம் முதல் ரூ.10.07 லட்சம் (எக்ஸ்ஷோரூம் மும்பை)
இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் போட்டியாளர்கள் ?
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மஹிந்திரா பொலிரோ பிக்கப் மற்றும் டாடா யாதோ பிக்கப் டிரக்கினை இசுசூ டி-மேக்ஸ் வரிசை எதிர்கொள்ளுகின்றது.
web title : bs-6 Isuzu D-Max, D-Max S-cab Launched in India
For the latest Tamil auto news and Truck News, follow automobiletamilan.com on Twitter, Facebook, and subscribe to our YouTube channel.