இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ரெட்ரோ கிளாசிக் தோற்றத்தை பெற்ற ஹோண்டா ஹெச்’நெஸ் சிபி 350 பைக்கினை நேரடியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா, ஜாவா 42, பெனெல்லி இம்பீரியல் 400 போன்றவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுகின்றது என்பதனை தொடர்ந்து ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம்.
ஹோண்டா சிபி 350 பைக்கின் நேரடியான போட்டியாளராக விளங்குகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350, புல்லட் போன்ற மாடல்கள் இந்தியாவின் ராஜாவாக 97 சதவிகித சந்தை மதிப்பையும், சர்வதேச அளவில் 50 சதவிகிதத்துக்கும் கூடுதலான சந்தை பங்களிப்பை நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் பெற்றுள்ளது.
இன்ஜின்
இந்த பிரிவில் குறைவான சிசி இன்ஜின் பெற்ற மாடலாக ஜாவா மற்றும் ஜாவா 42 விளங்குகின்றது. ஆனால் அதிகப்படியான பவரை ஜாவா 42 மாடல் 26.5 ஹெச்பி வரை வழங்குகின்றது. டார்க்கினை பொறுத்தவரை அதிகபட்சமாக ஹைனெஸ் சிபி 350 மாடல் 30 என்எம் வரை வழங்குகின்றது. இந்த பிரிவில் 6 வேக கியர்பாக்ஸ் ஆப்ஷனை ஜாவா பெறுகின்றது. மற்ற மாடல்கள் 5 வேக கியர்பாக்ஸ் பெறுகின்றன. முழமையான ஒப்பீட்டு அட்டவனை தொகுப்பினை கீழே கானலாம்.
Honda H’Ness CB 350 | Royal Enfield Classic 350 | Jawa/Jawa 42 | Benelli Imperiale 400 | |
இன்ஜின் | 348.36cc, single-cylinder, air-cooled | 346cc, single-cylinder, fuel-injected | 293cc, single-cylinder, liquid-cooled | 374cc, single-cylinder, air-cooled |
பவர் | 21.1hp at 5500rpm | 19.1hp 5250rpm | 26.5hp | 21hp at 6000rpm |
டார்க் | 30Nm at 3000rpm | 28Nm at 4000rpm | 27.05Nm | 29Nm at 3500rpm |
Power-to-weight ratio | 116.57hp/tonne | 97.94hp/tonne | 154.06hp/tonne | 102.43hp/tonne |
கியர்பாக்ஸ் | 5-speed | 5-speed | 6-speed | 5-speed |
டிசைன்
இந்தியளவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு உள்ள தனித்துவமான கிளாசிக் அடையாளத்தை எதிர்கொள்ள வேண்டிய ஹோண்டா நிறுவனம் தனது சிபி 1100 பைக்கின் உந்துதலை எடுத்துக் கொண்டு இந்திய சந்தைக்கு ஏற்ப வடிவமைத்துள்ளது.
வட்ட வடிவத்திலான ஹெட்லைட், நீளமான டேங்க், ஒற்றை இருக்கை ஆப்ஷன் என மிக நேர்த்தியாகவும், வட்ட வடிவ கிளஸ்ட்டரில் நவீனத்துவமான ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை இந்த பிரிவில் முதன்முறையாக பெறும் மாடலாக விளங்குகின்றது. எல்இடி ஹெட்லைட் மிகவும் நவீனத்துவமாக அமைந்துள்ளது.
மற்றபடி கிளாசிக் 350 தொடர்ந்து ரெட்ரோ ஸ்டைலை பெற்று பல்வேறு நிறங்களை கொண்டு விளங்குகின்றது. இரு பிரிவுகளை கொண்ட இருக்கையை பெற்று விளங்குகின்றது.
ஜாவா பைக்குகளும் ரெட்ரோ ஸ்டைலை கொண்டு பெரும்பாலான இடங்களில் க்ரோம் பாகங்களை கொண்டு விளங்குகின்றது. இரண்டு புகைப்போக்கியை பெற்று ஜாவா ரெட்ரோ தோற்ற அமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பெனெல்லி இம்பீரியல் 400 மாடல் கிளாசிக் பைக்கினை போலவே இரு பிரிவு இருக்கைகளை பெற்று ரெட்ரோ ஸ்டைலை பெற்றுள்ளது.
மற்ற நுட்ப விபரங்கள்
புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் தயாரிப்பு நிலையில் உள்ளதால் பல்வேறு மாற்றங்கள் பெற்று அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வரவுள்ளது. தற்போது உள்ள பிஎஸ்-6 மாடல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரு விதமான ஆப்ஷனில் கிடைக்கின்றது.
ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளும் டூயல் சேனல் மற்றும் சிங்கிள் சேனல் ஆப்ஷனை பெற்று டபுள் கார்டிள் ஃபிரேம் கொண்டு வடிவமைகப்பட்டுள்ளது. புதிய ஹைனெஸ் சிபி 350 மாடல் டபுள் கார்டிள் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. மற்றவற்றை முழுமையாக அட்டவனையில் ஒப்பீட்டு காணலாம்.
Honda H’Ness CB 350 | Royal Enfield Classic 350 | Jawa/Jawa 42 | Benelli Imperiale 400 | |
ஃபிரேம் | ஹாஃப் டூப்ளெக்ஸ் கார்டிள் | சிங்கிள் டவுன் ட்யூப் | டபுள் கார்டிள் ஃபிரேம் | டபுள் கார்டிள் |
எடை (kerb) | 181kg | 195kg | 172kg | 205kg |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 166mm | 135mm | NA | 165mm |
வீல்பேஸ் | 1441mm | 1390mm | 1369mm | 1440mm |
முன் பிரேக் | 310mm disc | 280mm disc | 280mm disc | 300mm disc |
பின் பிரேக் | 240mm disc | 240mm disc | 153mm drum / 240mm disc | 240mm disc |
முன்புற சஸ்பென்ஷன் | Telescopic fork | Telescopic fork | Telescopic fork | Telescopic fork |
பின்புற சஸ்பென்ஷன் | Twin shock absorbers | Twin shock absorbers | Twin shock absorbers | Twin shock absorbers |
முன் டயர் | 100/90-19 | 90/90-19 | 90/90-18 | 100/90-19 |
பின் டயர் | 130/70-18 | 110/90-18 (tube) / 120/80-18 (tubeless) | 120/80-17 | 130/80-18 |
எரிபொருள் | 15 லிட்டர் | 13.5 லிட்டர் | 14 லிட்டர் | 12 லிட்டர் |
விலை ஒப்பீடு
ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.85 லட்சம் துவங்கி அதிகபட்சமாக DLX புரோ வேரியண்டின் விலை ரூ.1.90 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஜாவா பைக் விலை முறையே ரூ.1.74 லட்சம் முதல் ரூ.1.83 லட்சம் வரையும், மற்றும் ஜாவா 42 விலை ரூ.1.65 லட்சம் முதல் ரூ.1.74 லட்சம் வரை அமைந்துள்ளது.
இந்த பிரிவில் அதிக விலை கொண்ட மாடலாக பெனெல்லி இம்பீரியல் 400 பைக் ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.10 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
மிக குறைந்த விலையில் துவங்குகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை ரூ.1.59 லட்சம் முதல் ரூ. 2.07 லட்சம் வரை கிடைக்கின்றது.
Honda H’Ness CB 350 | Royal Enfield Classic 350 | Jawa/Jawa 42 | Benelli Imperiale 400 | |
விலை | ரூ.1.85 லட்சம் – ரூ.1.90 லட்சம் | ரூ.1.59 லட்சம் – ரூ. 2.07 லட்சம் | ரூ.1.74- ரூ.1.83 லட்சம் / ரூ.1.65- ரூ.1.74 லட்சம் | ரூ.1.99 லட்சம் |
ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 மிகவும் சவாலான விலையில் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் போன்றவை அமைந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிக வலிமையான நெட்வொர்க் மற்றும் பிராண்ட் மதிப்பினை ஹோண்டா எதிர்கொள்வது மிக கடினமாகவே விளங்கும்.
புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் புதிய கிளாசிக் 350 பைக் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வெளியாகும்.
web title : Honda H’ness CB350 vs rivals specs and features – comparison