டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மட்டும் இணைக்கப்பட்ட சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் வேரியண்ட் ரூ.1.23 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஒப்பீடுகையில் ரூ.5,000 வரை விலை குறைவாக அமைந்துள்ளது.
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலில் 197.75 சிசி ஒற்றை சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 8500 ஆர்.பி.எம்மில் 20.5 பிஎஸ் சக்தியையும் 7500 ஆர்.பி.எம்மில் 16.8 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதீக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் குறைவான வேகங்களில் சிறப்பான ரைடிங் அனுபவத்தினை வழங்க GTT (Glide Through Traffic) பெற்றதாக வந்துள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு டிவிஎஸ் கனெக்ட் ஆப் மூலம் இணைத்துக் கொள்ளுவதன் மூலம் குறுஞ்செய்தி, அழைப்புகள் போன்ற அறிவிப்புகள், ஓவர் ஸ்பீடு அலெர்ட், டீரிப் மீட்டர், பார்க்கிங் இருப்பிடம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கிராஸ் அலெர்ட் மற்றும் அதிகபட்ச வேகத்தை பதிவு செய்வதுடன் ஹெல்மெட் ரிமைன்டரை கொண்டுள்ளது.
இந்த பைக்கில் உள்ள கைரோஸ்கோபிக் சென்சாரைப் பயன்படுத்தி வளைவுகளில் பயணிக்கும் போது குறைவான லீன் ஏங்கிளை பதிவு செய்கின்றது. பின்னர், அவை டிஜிட்டல் கன்சோலில் தோன்றும், மேலும் இதில் உள்ள ரேஸ் டெலிமெட்ரி ஒவ்வொரு ரேஸ் அல்லது சவாரி முடிவிலும் உள்ள அனைத்து அத்தியாவசிய தரவுகளையும் சுருக்கமாக வழங்கும். க்ராஷ் அலர்ட் சிஸ்டம் இது ஒரு அவசதர கால பாதுகாப்பு வசதியாகும்.
TVS Apache RTR 200 4V Price
Apache RTR 200 4V – ரூ. 1,23,500 (சிங்கிள் சேனல் ஏபிஎஸ்)
Apache RTR 200 4V – ரூ.128 567 (டூயல் சேனல் ஏபிஎஸ்)
(விற்பனையக விலை சென்னை)
மேலும் படிங்க – ஹோண்டா ஹார்னெட் 2.0 Vs டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி Vs பல்சர் பல்சர் 200என்எஸ் – எந்த பைக் வாங்கலாம் ?