டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மாடலான ரேடியான் பைக்கின் மூன்று இலட்சம் விற்பனை எண்ணிகையை கடந்ததை முன்னிட்டு ‘Dhaakad’ என்ற பெயரில் கூடுதலாக ரீகல் ப்ளூ மற்றும் க்ரோம் பர்பிள் நிறங்களை பெற்றுள்ளது.
ரேடியானில் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டு ET-Fi பெற்ற 109.7cc, சிங்கிள்-சிலிண்டர், 3-வால்வுகளுடன், ஏர் கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7,350 rpm-ல் 8.08bhp பவரும், 8.7Nm டார்க்கை 4,500rpm-ல் வழங்குகின்றது.
அனலாக் கிளஸ்ட்டர், சைடு ஸ்டேண்டு இன்டிகேட்டர், ஹெட்லேம்பை சுற்றி க்ரோம் பீசெல், எல்இடி டிஆர்எல், பல்வேறு இடங்களில் க்ரோம் பாகங்கள் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் என பல்வேறு சிறப்பு வசதிகளை டிவிஎஸ் ரேடியான் பைக் பெற்றுள்ளது.
இந்த மாடலில் ராயல் பர்பிள், பேர்ல் ஒயிட், கோல்டன் பீஜ், மெட்டல் பிளாக், டைட்டானியம் கிரே, வல்கோனா சிவப்பு மற்றும் புதிய ரீகல் ப்ளூ ஆகியவற்றில் கிடைக்கிறது. டாப் வேரியண்டில் குரோம் பிளாக், குரோம் பிரவுன் மற்றும் புதிய குரோம் பர்பிள் ஆகியவற்றில் வருகிறது.
இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஆயில் சஸ்பென்ஷன் மற்றும் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் பெற்றுள்ளது. பிரேக்கிங் அமைப்பினை பொறுத்தவரை ரேடியான் COTY எடிசனில் முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க், பேஸ் வேரியண்டில் 130 மிமீ டிரம் மற்றும் பொதுவாக பின்புற டயரில் 110 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.
TVS Radeon விலை பட்டியல்
பேஸ் வேரியண்ட் – ரூ.59,292
டிவிஎஸ் coty ரேடியான் டிரம் பிரேக் ரூ. 62,292
coty ரேடியான் டிஸ்க் பிரேக் – ரூ.65,292
(எக்ஸ்ஷோரூம் சென்னை)