ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் புத்தம் புதிய பிரீமியம் 300சிசி-400சிசி-க்குள் மோட்டார்சைக்கிள் மாடலை செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது. ஹோண்டாவின் பிங் விங் டீலர் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக வெளியிடப்பட உள்ள பிரீமியம் பைக்கின் நேரடியான போட்டியாளராக ராயல் என்ஃபீல்டு அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் உறுதியாக எந்த தகவலும் இல்லை. சமீபத்தில் ஹோண்டா CB190R பைக்கின் அடிப்பையில் ஹார்னெட் 2.0 வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்து வரவுள்ள மாடல் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ரீபெல் 300 பைக்கின் க்ரூஸர் அடிப்படையிலான உருவாக்கப்பட்ட மாடலாக அமைந்திருக்கலாம்.
ஹோண்டா நிறுவனத்தின் பிரீமியம் பிங் விங் (Honda’s BigWing ) டீலர் நெட்வொர்க் மூலமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.