சென்னை : ரூ.29,539 விலையில் டிவிஎஸ் XL 100 மொபட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 ஸ்ட்ரோக்குகளை கொண்ட டிவிஎஸ் XL 100 வேரியண்ட் ஹெவி டூட்டி சூப்பர் XL பைக்கிற்க்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு , பாண்டிச்சேரி , உத்திரப்பிரதேசம் , உத்திரகான்ட் , கேரளா , பிகார் , ஜார்கண்ட் மற்றும் அந்தமான் நிக்போர் போன்றவற்றில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் XL 100 பைக்கில் 4.2PS ஆற்றலை வெளிப்படுத்தும் 99.7CC 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 6.3Nm ஆகும். சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் XL 100 மொபட் மைலேஜ் 67 கிமீ ஆகும்.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஸ்பிரிங் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 80 மிமீ டிரம் மற்றும் பின்பக்கத்தில் 110மிமீ டிரம் பிரேக் பெற்றுள்ளது. 4 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு , பச்சை , கருப்பு , நீளம் மற்றும் கிரே என 5 வண்ணங்களில் கிடைக்கின்றது.
டிவிஎஸ் எக்ஸ்எல்100 விலை ரூ.29,539 தமிழக எக்ஸ்ஷோரூம் ஆகும்.