புதுப்பிக்கப்பட்ட புதிய ஹோண்டாய் கோனா எஸ்யூவி மற்றும் என் லைன் மாடல் தோற்ற அமைப்பு உட்பட இன்டிரியர் என பல்வேறு மாற்றங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது.
புதிய ஹூண்டாய் கோனா எஸ்யூவி
முந்தைய கோனா மாடலை விட புதிய மாடல் முகப்பில் மிக நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்ட அகலமான எல்இடி ரன்னிங் விளக்குகள், எல்இடி ஹெட்லேம்ப் பெற்று புதிய கிரில் டிசைன் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் மற்றும் பம்பர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இல்லாமல் சிறிய அளவிலான ஸ்டைலிங் ட்விக்ஸ் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கின்றது.
ஹூண்டாய் கோனா N எஸ்யூவி
ஹூண்டாயின் பெர்ஃபாமென்ஸ் ரக என் பிராண்டில் வந்துள்ள கோனா என் எஸ்யூவி காரில் முன்புற கிரில், புதிய வடிவ அலாய் வீல், டிஃப்யூசர், டூயல் புகைப்போக்கி மற்றும் இன்டிரியரில் கருப்பு நிறத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கோனா என்ஜின் விபரம்
கோனா எஸ்யூவி மாடலில் 198 ஹெச்பி பவரை வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 136 ஹெச்பி வழங்கும் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனுடன் கிடைக்க உள்ளது. கூடுதலாக, 120 ஹெச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 48 வோல்டு மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.
அடுத்து, 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் மாடலில் 1.56 kWh பேட்டரி பொருத்தப்பட்டு, முன்புறத்தில் எல்க்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு அதிகபட்சமாக 141 ஹெச்பி பவரை வழங்கும்.
பொதுவாக இந்த மாடல்களில் 7 வேக டிசிடி அல்லது 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். கூடுதலாக புதிய ஹூண்டாய் ஐ.எம்.டி கியர்பாக்ஸ் பெற உள்ளது. அடுத்தப்படியாக, 2 வீல் டிரைவ் அல்லது 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் கிடைக்க உள்ளது.
கோனா எலக்ட்ரிக் காரின் தோற்ற அமைப்பு புதிய ஐசி என்ஜின் பெற்ற மாடலை போலவே அமைந்திருக்கும். தற்போது இந்திய சந்தையில் கோனா எலக்ட்ரிக் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டில் பெட்ரோல் என்ஜின் பெற்ற ஹூண்டாய் கோனா, கோனா என் லைன் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படலாம்.