ஏப்ரிலியா ஸ்கூட்டர் தயாரிப்பாளரின் மேக்ஸி ஸ்டைல் மாடலான SXR160 முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்படிருந்த நிலையில் கோவிட்-19 பரவலால் அறிமுகம் நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டர்களில் சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் 125 சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லாத நிலையில் எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் எஸ்எக்ஸ்ஆர் 160 என இரு மாடல்களும் மிக சிறப்பான போட்டியை ஏற்படுத்த உள்ளது.
125 சிசி என்ஜினை பெற உள்ள எஸ்எக்ஸ்ஆர் 125 மற்றும் 160 சிசி என்ஜினை பெற உள்ள எஸ்எக்ஸ்ஆர் 160 என இரு மாடல்களும் ஸ்டைலிங் அம்சங்களை ஒரே மாதிரியாக பகிர்ந்து கொள்ள உள்ளன. குறிப்பாக முழு எல்இடி விளக்குகள், உயர்த்தப்பட்ட கைப்பிடி, யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட், முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கன்சோல், டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ், 5 ஸ்போக்குகளை பெற்ற 12 அங்குல அலாய் வீல் (14 அங்குல அலாய் வீல் எக்ஸ்எஸ்ஆர்160) பெற்றிருக்கும். சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய ஆறு விதமான நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.
வரும் அக்டோபர் மாத இறுதியில் முன்பதிவு துவங்கப்பட்டு நவம்பர் மாதம் ஏப்ரிலியா SXR160 விற்பனைக்கும் அதனை தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு குறைந்த விலை ஏப்ரிலியா SXR125 விற்பனைக்கு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.