வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் G310R மற்றும் அட்வென்ச்சர் ரக G310 GS மாடலின் பிஎஸ்-6 இன்ஜின் பெற்று பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்படு உள்ளது. முந்தைய மாடலை விட மிக சிறப்பான வகைஇயல் என்ஜின் மேம்பாடு பெற்றிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பே இந்த பைக்குகளின் அடிப்படையிலான டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலின் முன்பே பிஎஸ்-6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, பிஎம்டபிள்யூ மாடல்கள் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்க இணக்கமான, 312.2 சிசி என்ஜின் 34 ஹெச்பி பவரை 9,700 ஆர்.பி.எம் மூலமாகவும் மற்றும் 7,700 ஆர்.பி.எம்-ல் 27.3 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் இணைந்துள்ளது.
குறிப்பாக புதிய ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் என இரு மாடல்களும் எல்இடி லைட்டிங், ரைட் பை வயர் திராட்டில், மேம்பட்ட டிஜிட்டல் கிளஸ்ட்டர் போன்றவற்றுடன் ரைடிங் மோட் உட்பட பல்வேறு நவீனத்துவமான நுட்பம் சார்ந்த வசதிகளும் இணைக்கப்பட்ட்டிருக்கலாம்.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில், அடுத்த சில வாரங்களுக்குள் விலை அறிவிக்கப்படலாம்.