பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதனை இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கே தாசரி அளித்த பேட்டியில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து வரும் இலையில், பெரும்பாலான முன்னணி தயாரிப்பாளர்கள் மின்சாரத்தில்எ இயங்கும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளனர்.
வினோத் கே தாசரி கூறுகையில், என்ஃபீல்டிற்கு “எந்தப் பிரிவு எங்களுக்கு சரியான பிரிவு என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், “எலக்ட்ரிக் என்பது நாங்கள் மிகவும் தீவிரமாக செயல்படுத்த உள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.
இந்நிறுவனம் தனது மின்சார மோட்டார் சைக்கிளின் முன்மாதிரிகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், தயாரிப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், எந்த மின்சார பைக் அரங்கில் நுழைவதற்கு சரியான பகுதியைத் தேர்வு செய்யவும் இதற்காக ஒரு பிரத்தியேக உள் குழுவை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எப்போது அறிமுகம் ? என்ற கேள்விக்கு நாங்கள் மிக தீவரமாக ஆய்வினை மேற்கொண்டு வருகின்றோம். எனவே, அதற்கான சூழ்நிலை அமைந்த பின்னரே பல்வேறு பிரிவுகளில் விற்பனைக்கு வெளியிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தற்போது முன்மாதிரிகளை உருவாக்கி அதற்கான முதற்கட்ட சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகின்றது.
source-moneycontrol.com