பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் மிகவும் தாராளமான இடவசதி மற்றும் பல்வேறு வசதிகளை பெற்ற புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு வெளியிப்பட உள்ள நிலையில் தற்போது முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ரூ.21,000 செலுத்தி டீலர்கள் மூலமாகவோ அல்லது ரூ.5,000 செலுத்தி ஆன்லைன் வாயிலாக (“Honda From Home”) இந்த காரினை பதிவு செய்துக் கொள்ளலாம்.
புதுப்பிக்கப்பட்ட ஜாஸில் கூடுதலான பல்வேறு வசதிகளுடன் குறிப்பாக தோற்றத்தில் கருமை நிற கிரிலுடன் கூடிய க்ரோம் கார்னிஷ், புதிய பம்பர் எல்இடி ஹெட்லைட், எல்இடி பனி விளக்கு மற்றும் எல்இடி டெயில் லைட் என பெற்ற இந்த மாடலில் 15 அங்குல அலாய் வீல் பெற்று முற்றிலும் ஸ்போர்ட்டிவாக அமைந்துள்ளது.
குறிப்பிடதக்க இன்டிரியர் அம்சங்களில் ஒன் டச் சன் ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்மார்ட் என்ட்ரி, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலில் பேடெல் ஷிஃபடர் உள்ளது.
புதிய ஜாஸ் காரில் டீசல் என்ஜின் இடம் பெறாது. 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 90hp பவரை வழங்கும். இந்த காரில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெறும்.
புதிய ஹோண்டா ஜாஸ் காரினை அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ளது.