யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஆர்15 வி3, எம்டி-15, எஃப்இசட், மற்றும் எஃப்இசட்எஸ் போன்ற பைக்குகளின் விலையை கனிசமாக உயர்த்தியுள்ளது. எம்டி-15 பைக்கின் விலையை ரூ.1,000 வரை தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
யமஹா எம்டி-15 பைக்கின் கருப்பு மற்றும் நீலம் நிறத்தை கொண்ட மாடல் விலை ரூ.1,39,900 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிரே கலர் இப்போது ரூ.1,40,900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்தது, பிரசத்தி பெற்ற யமஹா ஆர்15 வெர்ஷன் 3.0 மாடலின் விலை ரூ.2100 வரை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. தண்டர் கிரே நிறத்தின் விலை ரூ. 1,47,900, ரேசிங் ப்ளூ நிறத்தைப் பெற்ற மாடல் ரூ. 1,49,000 மற்றும் டார்க் நைட் எடிஷன் விலை ரூ.1,50,000 ஆக உயர்ந்துள்ளது.
யமஹா எஃப்இசட், எஃப்இசட்எஸ் என இரு மாடல்களின் விலையும் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.2,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
FZ FI: ரூ. 1,01,700 (vs. ரூ.99,700)
FZS FI: ரூ. 1,03,700 (vs. ரூ.1,01,700)
FZS FI Dark Knight: ரூ. 1,05,200 (vs. ரூ.1,03,200)