சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யூவி கான்செப்ட் காரின் இன்டிரியர் படங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் தாராளமான இடவசதியுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுவது உறுதியாகியுள்ளது.
4 மீட்டருக்கு குறைவான நீளத்தைப் பெற்ற எஸ்யூவி கார்களில் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற மேக்னைட் காரின் தோற்ற அமைப்பு மிக நேர்த்தியான முறையில் கொண்டு வரப்பட்டு கான்செப்ட் சில வாரங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதற்கு இணையாகவே உற்பத்தி நிலை மாடலின் சோதனை ஓட்ட படங்களும் கசிந்தது.
இன்டிரியர் டிசைன் படங்கள்
தற்போது வெளியிடப்பட்டுள்ள இன்டிரியரில் மிக நேர்த்தியான 3 ஸ்போக்குகளை பெற்ற ஸ்டீயரிங் வீலில் ஆடியோ மவுன்டேட் கன்ட்ரோல் வழங்கப்பட்டு, டிஜிட்டல் கிளஸ்ட்டர் எவ்விதமான கோடுகளும் இல்லாமல் நீட் அன்ட் கிளீன் டிசைனாக கொடுக்கபட்டுள்ள டேஸ்போர்டில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளும் வழங்கப்பட உள்ளது.
அதே போல பின்புற இருக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடவசதி குறித்தும் படத்தில காண்பிக்கப்பட்டுள்ளது. மேக்னைட் காரின் இடவசதி மிக நேர்த்தியாகவும் இருக்கைகளுக்கான நிறங்கள் மற்றும் கேபின் சிறப்பாக வழங்கப்படும் என்பதனை உறுதி செய்துள்ளது.
மேக்னைட் எஸ்யூவி கார் மாடலில் 95 hp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதவிர சாதாரன 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவருடன் வரக்கூடும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெறக் கூடும்.
நடப்பு நிதி ஆண்டில் அதாவது ஜனவரி 2021-ல் மேக்னைட் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வருவதனை நிசான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.