ரூ.1.99 லட்சம் விலையில் வரவுள்ள பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற புதிய மஹிந்திரா மோஜோ பைக்கின் விலை நிறங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. முந்தைய பிஎஸ-4 மாடலை விட ரூ.11,000 முதல் ரூ.20,000 வரை விலை உயர்ந்துள்ளது.
சமீபத்தில் டீசர் வீடியோ மற்றும் புதிதாக வந்துள்ள நிறங்கள் என அனைத்தும் வெளியாகியிருந்த நிலையில், தற்போது டீலர்களுக்கு வந்துள்ள சுற்றறிக்கையில் விலை மற்றும் நுட்ப விபரங்கள் வெளியாகியுள்ளது.
295cc லிக்யூடு கூல்டு எஃப்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டு பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையாக மாற்றப்பட்டிருக்கும். 25.55 பிஹெச்பி குதிரைத்திறனை 7500rpm சுழற்சியிலும், 25.96 என்ம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வரவுள்ளது. பிஎஸ்4 என்ஜினை விட பிஎஸ்6 மாடல் சற்று பவர், டார்க் குறைவாக அமைந்திருக்கின்றது.
இந்த பைக்கில் பைரெல்லி டயர்களுடன் கூடுதலாக பிரேக்கிங் சிஸ்டத்தில் 320 மிமீ மற்றும் 240 மிமீ டிஸ்க்குகளை முறையே பைபிரே நிறுவன காலிப்பர்களுடன் கொண்டதாக அமைந்திருக்கும்.
புதிய மோஜோ பைக்கின் விலை ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.11 லட்சம் வரை முழு விலை பின்வருமாறு;-
Mojo BS6 Price
Mojo வேரியன்ட் | விலை |
Black Pearl | ரூ. 1,99,900 |
Garnet Black | ரூ. 2,06,000 |
Ruby Red | ரூ. 2,11,000 |
Red Agate | ரூ. 2,11,000 |
(எக்ஸ்ஷோரூம் இந்தியா)
price info – instagram/upshifters