ஹோண்டா கார்ஸ் நிறுவனம் பிஎஸ் 6 இன்ஜின் பெற்ற சிவிக் டீசல் மாடலை ரூ.20.75 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் தொடர்ந்து VX மற்றும் ZX என இருவிதமான வேரியண்டுகள் மட்டும் கிடைக்கின்றது.
முந்தைய பிஎஸ்4 இன்ஜின் பவரில் எந்த மாற்றங்களும் இல்லை, தொடர்ந்து 121 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. மற்றபடி தொடர்ந்து 6 வேக மேறுவல் கியர்பாக்ஸ் மட்டுமே பெற்றதாக அமைந்துள்ளது. முந்தைய பிஎஸ்4 மாடலை விட மைலேஜ் 3 கிமீ வரை குறைந்து தற்போது ஆராய் சான்றிதழ்படி 23.9 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை. இரு வேரியண்டுளிலும் பாதுகாப்பு வசதிகள் ஒரே மாதிரியாக அமைந்து 6 ஏர்பேக்குகள் பெற்று கூடுதலாக இந்த பிரிவில் முதன்முறையாக லேன் வாட்ச் கேமரா சிஸ்டம் பெற்றுள்ளது. இன்டிரியரில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்-6 ஹோண்டா சிவிக் டீசல் விலை பட்டியல்
Diesel VX – ரூ. 20,74,900
Diesel ZX – ரூ. 22,34,900
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)