ஜிஎம் செவர்லே நிறுவனம் வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் செவர்லே பீட் காரை பார்வைக்கு கொண்டு வரவுள்ளதை டீஸர் படத்தினை வெளியிட்டுள்ளது. இது தவிர புதிய க்ரூஸ் , ட்ரெயில்பிளேசர் , ஸ்பின் , கொலராடோ பிக்அப் டிரக் , கொர்வெட் மற்றும் கேமரோ மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது.
பீட் டீஸர்
இரண்டு புதிய கான்செப்ட் மாடலை ஆட்டோ எக்ஸபோவில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2017ம் ஆண்டில் வரவுள்ள செவர்லே பீட் ( ஸ்பார்க் ) மற்றும் இதன் அடிப்படையாக கொண்ட க்ராஸ்ஓவர் ரக மாடலும் வரவுள்ளது.
புராஜெக்ட்ர் முகப்பு விளக்குகளுடன் அமைந்துள்ள பகல்நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி பனி விளக்குகள் , நேர்த்தியாக அமைந்துள்ள புதிய செவர்லே பாரம்பரிய முகப்பு கிரில் போன்றவற்றை டீசர் படத்தில் வெளியிட்டுள்ளது. கருப்பு நிற பாடி கிளாடிங் மற்றும் பின்புறம் பார்க்கும் ரியர் வியூ கண்ணாடியிலும் கருப்பு வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ள செவர்லே ஸ்பின் எம்பிவி காரும் காட்சிக்கு வருகின்றது. மேலும் சமீபத்தில் விற்பனைக்கு வந்த ட்ரெயில்பிளேசர் எஸ்யுவி , 2014ம் ஆண்டு காட்சிக்கு வந்த அட்ரா கான்செப்ட் மாடல் , வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள கொலராடோ பிக்அப் டிரக் சூப்பர் ஸ்போர்ட்ஸ் ரக கார் மாடல்களான கொர்வெட் மற்றும் கேமரோ கார்களும் காட்சிக்கு வருகின்றது. இதுதவிர புதிய மேம்படுத்தப்பட்ட செவர்லே க்ரூஸ் செடான் விற்பனைக்கு வரலாம்.
2020ம் ஆண்டுக்குள் 10 புதிய மாடல்களை இந்தியாவிலே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள ஜிஎம் செவர்லே புதிய பீட் மற்றும் பீட் க்ராஸ்ஓவர் , GEM-B அட்ரா கான்செப்ட் காம்பேக்ட் எஸ்யூவி போன்ற மாடல்களிலும் முக்கிய கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.