ஆர்.ஆர் குளோபல் நிறுவனத்தின் பிகாஸ் எலக்ட்ரிக் (Bgauss Electric) இரு சக்கர வாகன தயாரிப்பாளர் குறைந்த வேகம் பெற்ற பிகாஸ் A2 மற்றும் உயர் வேக பிகாஸ் B8 என இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அடுத்த மாதத்தின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மின்சார உபகரணங்கள் தயாரிப்பாளரான ஆர்.ஆர் குளோபல் நிறுவனத்தின் சார்பாக துவங்கப்பட்டுள்ள பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் புனேவில் ஆலை துவங்கப்பட்டு நடப்பு FY 2020-2021 நிதி ஆண்டில் 80,000 வாகனங்கள் வரை விற்பனை இலக்கை நிர்ணையித்துள்ளது. முதற்கட்டமாக தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பிகாஸ் பிராண்டில் முதலில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மொத்தமாக 5 விதமான வேரியண்டில் வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் லெட் ஆசிட், லித்தியம் ஐயன் பேட்டரி என இருவிதமான தேர்வுகளையும் வழங்க உள்ளது.
Bgauss B8 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
உயர் வேக பிகாஸ் பி8 மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச மணிக்கு 50 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 1.9 கிலோ வாட் போஸ் BLDC மோட்டார் கொண்டு லெட் ஆசிட் மற்றும் லித்தியம் ஐயன் பேட்டரி என இரண்டிலும் கிடைக்க உள்ளது.
இதன் லெட் ஆசிட் பேட்டரி மாடல் பி8 ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி நீக்க இயலாத வகையில் பொருத்தப்பட்டு முழுமையாக சார்ஜிங் செய்ய 7-8 மணி நேரம் ஆகும். முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 78 கிமீ வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகின்றது.
இதன் லித்தியம் ஐயன் பேட்டரி மாடல் பி8 ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி நீக்கும் வகையில் பொருத்தப்பட்டு முழுமையாக சார்ஜிங் செய்ய 3 மணி நேரம் ஆகும். முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 78 கிமீ வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு மூன்று வருட வாரண்டி வழங்கப்படுகின்றது.
இந்த ஸ்கூட்டரில் 36 கிமீ , 42 கிமீ மற்றும் 50 கிமீ வேகம் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. 36 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது 70 கிமீ (78 கிமீ லெட் ஆசிட்) மட்டும் கிடைக்கும். அதே நேரத்தில் 42 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது 65 கிமீ (69 கிமீ லெட் ஆசிட்) மட்டும் கிடைக்கும். இறுதியாக, 50 கிமீ வேகத்தில் பயணித்தால் 60 கிமீ (68 கிமீ லெட் ஆசிட்) மட்டும்.
Bgauss A2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
குறைந்த வேகம் பிகாஸ் ஏ2 மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 250 வாட் போஸ் BLDC மோட்டார் கொண்டு லெட் ஆசிட் மற்றும் லித்தியம் ஐயன் பேட்டரி என இரண்டிலும் கிடைக்க உள்ளது.
இதன் லெட் ஆசிட் பேட்டரி மாடல் ஏ2 ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி நீக்க இயலாத வகையில் பொருத்தப்பட்டு முழுமையாக சார்ஜிங் செய்ய 7-8 மணி நேரம் ஆகும். லித்தியம் ஐயன் பேட்டரி அதிகபட்சமாக 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டும் போதுமானதாகும். முழுமையான சிங்கிள் சார்ஜில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக 110 கிமீ வரை பயணிக்கலாம்.
16 கிமீ , 21 கிமீ மற்றும் 25 கிமீ வேகம் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளது. 21 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது 98 கிமீ மட்டும் கிடைக்கும். அதே நேரத்தில் 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் போது 85 கிமீ மட்டும் கிடைக்கும். லித்தியம் ஐயன் பேட்டரிக்கு மூன்று வருட வாரண்டியும், லெட் ஆசிட் பேட்டரிக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகின்றது.
இரண்டு ஸ்கூட்டரிலும் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. பி8 ஸ்கூட்டரில் ப்ளூடூத் ஆதரவினை பெற்ற கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் நேவிகேஷன், லைவ் டிராக்கிங் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.
விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் மத்தியில் வெளியிடப்பட உள்ள இந்த இரு மாடல்களும் ரூ.50,000 முதல் ரூ.1.40 லட்சத்திற்குள் அமைந்திருக்கும்.