ஹோண்டா இந்தியா வெளியிட்டுள்ள டீசரின் மூலமாக பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற புதிய லிவோ பைக் விற்பனைக்கு வெளியாகுவதனை உறுதி செய்துள்ளது. முன்பாக விற்பனை செய்யபட்ட மாடலை விட ரூ.6000 முதல் அதிகபட்சமாக ரூ.8,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரவுள்ள லிவோவில் சிடி 110 ட்ரீம் மாடலில் இடம்பெற்றிருக்கின்ற அதே 110சிசி இன்ஜின் பெற்றிருக்கும். எனவே புதிய மாடல் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற 110 சிசி இன்ஜின் eSP நுட்பத்துடன் அதிகபட்சமாக 8.67 hp பவரை 7500 ஆர்பிஎம்-லும், 9.30 Nm டார்க் 7500 ஆர்பிஎம்-ல் வழங்குகின்றது. தொடர்ந்து 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
இஎஸ்பி சிஸ்டத்தை பெற்றுள்ளதால் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, டிசி ஹாலஜென் பல்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் ஆஃப் சுவிட்சு மற்றும் நீளமான இருக்கை கொண்டிருக்கலாம்.
இருபக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்று கூடுதலாக சிபிஎஸ் பிரேக்கிங் திறனை கொண்டதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் டைப் ஷாக் அப்சார்பர் பெற்றதாக அமைந்திருக்கும்.
புதிய ஹோண்டா லிவோ பைக் விலை ரூ.68,000 முதல் துவங்க வாய்ப்புகள் உள்ளது.