முக்கிய குறிப்பு
- 6 இருக்கை கொண்ட எம்ஜி ஹெக்டர் பிளஸ் காரில் மூன்று என்ஜின் ஆப்ஷன்
- குஜராத் மாநிலம் ஹலால் ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
- ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம்
வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு வெளியாவுள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 6 இருக்கைப் பெற்ற ஹெக்டர் பிளஸ் காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான என்ஜின் தேர்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கடந்த ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிக்கு வந்த ஹெக்டர் பிளஸ் கார் முன்பாக விற்பனையில் கிடைத்து வருகின்ற ஹெக்டர் எஸ்யூவி அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும். இந்நிறுவனம் இதற்கு முன்பாக இசட்எஸ் இவி காரை வெளியிட்டிருந்த நிலையில் மூன்றாவது மாடலாக ஹெக்டர் பிளஸ் விளங்க உள்ளது. கோவிட்-19 ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
ஹெக்டர் காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ள இந்த மாடலில் 143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.
2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.
இரு மாடல்களுக்கு இடையில் தோற்ற அமைப்பில் முகப்பில் முன்புற கிரில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு முன்புற பம்பர், எல்இடி ஹெட்லைட் உடன் ரன்னிங் விளக்கில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டுள்ளது. பின்புற பம்பர் டெயில் கேட் மற்றும் எல்இடி விளக்குகளில் சிறிய மாறுதல் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டிரியரை பொறுத்தவரை சிறிய அளவிலான ஸ்டைலிங் ட்விக்ஸ், 10.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், எம்ஜி இண்டர்நெட் இன்சைடு கனெக்ட்டிவிட்டி வசதிகள் இடம்பெற உள்ளது.
6 இருக்கை பெற உள்ள எம்ஜி ஹெக்டர் பிளஸ் காருக்கு நேரடியான போட்டியை இன்னோவா கிரிஸ்டா, கிராவிட்டாஸ், XUV500 போன்றவை ஏற்படுத்த உள்ளது.