பிஎஸ்6 இன்ஜின் பெற்ற ஹீரோ HF டீலக்ஸ் மோட்டார் பைக்கில் கிக் ஸ்டார்ட் பெற்றதாக தற்போது ரூபாய் 47,385 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனைக்கு கிடைக்கின்ற எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற மாடலை விட ரூ.9,875 விலை குறைவாக அமைந்துள்ளது.
புதிய ஹெச்.எஃப் டீலக்ஸ் மிக சிறப்பான வகையில் ரைடிங் டைனமிக்ஸ் மேம்படுத்தப்பட்டு புதிய 100 சிசி என்ஜின் எக்ஸ்சென்ஸ் டெக்னாலாஜி (Xsens Technology – 10 சென்சார்களை) பெற்றதாக ஃப்யூவல் இன்ஜெக்ஷனை (Programmed Fuel Injection system) கொண்டு அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 7.94 பிஹெச்பி பவர் மற்றும் 8.04 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என்ஜினை கொண்டுள்ளது. மேலும் எரிபொருளை சேமிக்க i3S (idle start-stop system) நுட்பத்தை கொண்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 6 சதவீத கூடுதலான வேகத்தையும், 9 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
டீயூப்லர் டபுள் கார்டில் அடிச்சட்டகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் அப் மற்றும் பின்புறத்தில் இரட்டை ட்வீன் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.
ஹீரோவின் ஐபிஎஸ் எனப்படுகின்ற ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தினை பெற்று இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக்குகளால் பிரேக்கிங் அம்சத்தை கொண்டுள்ளது. கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 மிமீ மற்றும் வீல்பேஸ் 1,235 மிமீ ஆகியவற்றில் மாற்றமில்லை. தோற்ற வடிவமைப்பு மற்றபடி வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் புதிய கிராபிக்ஸ் மற்றும் டெக்னோ ப்ளூ மற்றும் ஹெவி கிரே என இரண்டு புதிய நிறங்களுடன், கருப்பு உடன் சிவப்பு, கருப்பு உடன் பர்பிள் மற்றும் கருப்பு உடன் கிரே நிறங்களைப் பெறுகிறது.
பிஎஸ்6 ஹீரோ HF டீலக்ஸ் விலை பட்டியல்
கிக் ஸ்டார்ட் உடன் ஸ்போக் வீல் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 47,385
கிக் ஸ்டார்ட் உடன் அலாய் வீல் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 48,385
செல்ஃப் ஸ்டார்ட் உடன் அலாய் வீல் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 55,925
செல்ஃப் ஸ்டார்ட் அலாய் வீல் உடன் ஐ3எஸ் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 57,250
செல்ஃப் ஸ்டார்ட் அலாய் வீல் – ஆல் பிளாக் ரூ.57,400
(எக்ஸ்ஷோரூம் சென்னை விலை)