ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிதாக தனது மாடல்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அனைவருக்கும் ரூ.10,000 மதிப்புள்ள ஆக்செரீஸ் மற்றும் ஆடைகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை மே 31 ஆம் தேதிக்குள் முழுமையான ஆன்-ரோடு கட்டணத்தைச் செலுத்துவோருக்கு மட்டும் பொருந்தும் என அறிவிகப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்று பரவல் ஊரடங்கு உத்தரவு தடையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான நகரங்களில் இந்நிறுவனம் தனது டீலர்களை துவங்கியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு டீலர்ஷிப்பில் இருக்கும் துனைக்கருவிகளில் மட்டுமே தேர்வு செய்ய முடியும். மேலும், ரூ .10,000 வெகுமதி சலுகையை ரொக்கமாகவோ அல்லது ஆன்-ரோடு விலையில் தள்ளுபடியாகவோ மாற்ற முடியாது. ரூ.5000 நீட்டிக்கப்பட்ட வாரண்டிக்கும், ரூ.5,000 மட்டும் ஆக்செரீஸ் மற்றும் ஆடைகளுக்கு கிடைக்கும்.
கூடுதல் சலுகையாக ரூ.10,000க்கும் கூடுதலாக ஆக்செரீஸ் வாங்குவோருக்கு விலையில் 20 % சலுகைகளை வழங்கவும் ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.
மேலும் வாசிக்க ;- விரைவில் ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 ஃபயர்பால் அறிமுகம்