பெட்ரோல் எலக்ட்ரிக் ஹைபிரிட் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் GTE ஏக்டிவ் கான்செப்ட் மாடலை டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது. டிகுவான் பிஹெச்இவி எஸ்யூவி சுற்றுச்சூழலை பாதிக்காத எஸ்யூவி காராக விளங்கும்.
டிகுவான் ஜிடிஇ ஏக்டிவ் எஸ்யூவி கார் மிக சிறப்பான ஸ்டைலுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு விற்பனைக்கு செல்கின்றது. இந்தியாவில் டிகுவான் எஸ்யூவி டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வருகின்றது.
ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலாக விளங்கும் டிகுவான் ஜிடிஇ ஏக்டிவ் மாடலில் 148hp ஆற்றலை வழங்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் முன்பக்க பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் அச்சில் 54hp ஆற்றல் மற்றும் 114hp ஆற்றல் பின்பக்க அச்சில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் வெளிப்படுத்தும். என மூன்றின் ஒட்ட்மொத்த ஆற்றலும் சேர்த்து 221hp ஆற்றலை வழங்கும். இதில் 6 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 12.4Kwh லித்தியம் ஐயன் பேட்டரி லக்கேஜ் கம்பார்ட்மென்ட் அடியில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 240v அல்லது பெட்ரோல் என்ஜின் வழியாக சார்ஜ் ஏறும்.
முழுமையான எலக்ட்ரிக் ரேஞ்சில் 32 கிமீ வரை பயணிக்க இயலும். இதன் எலக்ட்ரிக் மோடில் உச்ச வேகம் மணிக்கு 112கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆன் ரோடு , ஆஃப் ரோடு , ஸ்போர்ட் , ஸ்னோ , சார்ஜ் மற்றும் பேட்டரி ஹோல்ட் என 6 விதமான டிரைவிங் மோடினை கொண்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் GTE பிளக்இன் ஹைபிரிட் நுட்பம் இதற்கு முன்பு கோல்ஃப் ஜிடிஇ காரில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. டிகுவான் எஸ்யூவி கார் இந்தியா சந்தைக்கு இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.
[envira-gallery id=”5387″]